| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ


ஐப்பசி
ஏழாம் தமிழ் மாதம் - seventh tamil month - (பெ.)
ஐதீகம்
காலம் காலமாக இருக்கும் நம்பிக்கை - traditional belief - இந்தக் கோயிலைப் பற்றிப் பல ஐதீகங்கள் உள்ளன - (பெ.)
ஐம்பொன்
பஞ்சலோகம் - தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை - Alloy of five metals like gold, iron, copper, lead and silver - இந்தக் கோயிலில் சிலை ஐம்பொன்னால் ஆனது - (பெ.)
ஐயம்
சந்தேகம் - doubt - ஆசிரியர் மாணவர்களின் ஐயங்களை தெளிவு செய்தார். - (பெ.) (உ.வ.)
ஐயனார்
ஊருக்கு வெளியில் இருக்கும் காவல் தெய்வம் - Village protecting deity - ஐயனார் சிலை வலது கையில் செண்டாயுதத்துடனும் இடது காலை குத்துக்கால் வைத்த நிலையிலும் ஊருக்கு வெளியில் அமைந்துள்ளது. - (பெ.)
ஐயா
வயதில் மூத்த ஆண்களை குறிக்கும் சொல் - Sir - ஐயா உங்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும்? - (பெ.)
ஐயுறவு
சந்தேகித்தல் - doubt - கணவன் மனைவி ஐயுறவினால் பிரிந்து வாழ்கின்றனர் - (பெ.) (இலங்.)