தமிழ்ச் சொல் அகராதி
     
நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ


ஹர்த்தால்
கடையடைப்பு - hartal - (பெ.) தொழிலாளர் பிரச்சனைக்களுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்தல்
ஹராம்
இஸ்லாம் மதம் தடைசெய்த - prohibited by islam religion - (பெ.)(இஸ்.)
ஹரிகதை
திருமால் கதைப்பாட்டு - vishnu story with songs - (பெ.)
ஹலால்
இஸ்லாம் மதம் அனுமதித்தவை - sanctioned by islam religion - (பெ.) (இஸ்.) இந்த உணவகத்தில் ஹலால் உணவுகள் மட்டுமே விற்கப்படுகின்றன
ஹவாலா
சட்டத்துக்கு புறம்பாக வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றம் - illegal money transaction from foreign countries - (பெ.)
ஹஜ்
மெக்கா, மெதினா புனிதப் பயணம் - pilgrimage to Mecca and Medina - (பெ.) (இஸ்.)
ஹாயாக
கவலையற்று - carefree - (வி.அ.) (பே.வ.) உல்லாசமாக, relaxed.
ஹாஜி
ஹஜ் புனிதப் பயணம் முடித்தவர் - one who completed Haj pilgrimage, relaxed - (பெ.) (இஸ்.). எங்கள் ஊர் ஹாஜி சுலைமான் மிகவும் நல்லவர்.
ஹாஸ்யம்
நகைச்சுவை - joke - (பெ.) சிரிப்புத் துணுக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் வரும் ஹாஸ்யங்கள் சிறந்தவை.
ஹிந்துஸ்தானி சங்கீதம்
வட இந்திய செவ்வியல் இசை - North Indian classical music - (பெ.)
ஹேஸ்யம்
ஊகம் - a rough estimate - (பெ.) (பே.வ.) conjecture
ஹைதர் காலம்
பழைய காலம் - bygone era - (பெ.) அந்த ஹைதர் கால வண்டி யாருடையது?
ஹோதா
அந்தஸ்து - status - (பெ.) (அ.வ.) நிலை, தகுதி, பதவி வந்ததும் அவன் ஹோதாவே மாறிவிட்டது, capacity, authority
ஹோமம்
யாகம் - worship with sacrificial fire - (பெ.) புதிய வீட்டில் கணபதி ஹோமம் செய்தார்கள்.
ஹோமியோபதி
நோய் உண்டாக்கும் பொருளின் சிறு அளவை மருந்தாக பயன்படுத்தும் மருத்துவ முறை - homeopathy - (பெ.)

பெ. - பெயர்ச்சொல் | வி. - வினைச்சொல் | து.வி. - துணை வினை | வி.மு. - வினை முற்று | பெ.அ. - பெயரடை | வி.அ. - வினையடை | இ.சொ. - இடைச்சொற்கள் | அ.வ. - அருகிவரும் வழக்கு | பெ.வ. - பெருகிவரும் வழக்கு | பே.வ. - பேச்சு வழக்கு | உ.வ. - உயர் வழக்கு | த.வ. - தகுதியற்ற வழக்கு | வ.வ. - வட்டார வழக்கு | இ.வ. - இலங்கை வழக்கு | ச.வ. - சமூக வழக்கு | இஸ். - இஸ்லாமிய வழக்கு | கிறித். - கிறித்துவ வழக்கு | இசை. - இசை வழக்கு | கணி. - கணித வழக்கு | இயற். - இயற்பியல் வழக்கு | உயிரி. - உயிரியல் வழக்கு | கணினி. - கணினி வழக்கு | இலக். - இலக்கண வழக்கு

தமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!

அன்புடையீர் வணக்கம்!

     எம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

     இது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
கோ.சந்திரசேகரன்


நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)