| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ


ஸ்தபதி
சிற்பி - temple sculptor - (பெ.) கோயில் பணியில் இருக்கும் சிற்பி
ஸ்தம்பம்
தூண் கம்பம் - post, pole, கொடிமரம் - flag-pole - (பெ.)(அ.வ.) கோயில் முகப்பில் உள்ள கொடிமரம்
ஸ்தம்பி (ஸ்தம்பிக்க, ஸ்தம்பித்து)
தடைபடுதல், நிற்றல் - come to standstill, செயலிழந்து போதல் - stunned - (வி.) ஊர்வலம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது, தலவரின் இறப்பால் நாடே ஸ்தம்பித்தது.
ஸ்தலபுராணம்
(பெ.) காண்க: தலபுராணம்
ஸ்தலம்
(பெ.) காண்க: தலம்
ஸ்தாபகர்
நிறுவனர் - founder, செயலிழந்து போதல் - stunned - (பெ.)(அ.வ.) ஊர்வலம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது, தலவரின் இறப்பால் நாடே ஸ்தம்பித்தது.
ஸ்தாபனம்
நிறுவனம்/அமைப்பு - institution, (பெ.)(அ.வ.) கோவையில் பல தனியார் உற்பத்தி ஸ்தாபனங்கள் உள்ளன, திருச்செங்கோட்டில் பல கல்வி ஸ்தாபனங்கள் இயங்குகின்றன
ஸ்தாபி
நிறுவுதல்/ஏற்படுத்து - found/establish, நிலைநாட்டு - establish (வி.) இந்த நிறுவனத்தை ஸ்தாபித்தவரின் சிலை நிறுவப்பட்டது, அவர் தன் கருத்தை ஸ்தாபிக்க பலமாக வாக்குவாதம் செய்தார்.
ஸ்தாயி
இசையின் ஏழு ஸ்வரங்களின் ஒரு பகுதி - octave, (பெ.) பாடகர் உச்ச ஸ்தாயியில் பாடினார்.
ஸ்தானம்
இலக்கம் - digit, நிலை - place, வேலை/பணியிடம்/பதவி - post, இடம் - position -(பெ.)(அ.வ.) நான்கு ஸ்தான கடவுச்சொல், அன்னை ஸ்தானத்திலிருந்து வளர்த்தார், தலைமையாசிரியர் ஸ்தானம் காலியாக உள்ளது, ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் நீச்சமடைந்துள்ளது
ஸ்திரப்படுத்து
நிலைக்கச் செய்தல் - stabilize - (வி.)(அ.வ.) தனது பதவியை ஸ்திரப்படுத்திக் கொள்ள கட்சித் தலைவர் போராடி வருகிறார்.
ஸ்திரம்
உறுதியானது/நிலையானது - firmness/steadfastness - (பெ.) தீயினால் பாதிக்கப்பட்ட கட்டடம் ஸ்திரமாக இல்லை
ஸ்திரீலோலன்
பெண்களின் பின் அலைபவன் - lecherous man - (பெ.)(அ.வ.) ஸ்திரீலோலனை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஸ்திரீ
பெண் - women - (பெ.)(அ.வ.) ஸ்திரீகளின் பெட்டியில் ஏறிய ஆடவர் இறக்கி விடப்பட்டனர்.